விருப்பங்கள்

Tuesday, January 19, 2010

உலகத்தின் அதிவேக ரயில் சீனாவில் இயக்கம்

[ வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2010, 04:20.08 பி.ப GMT ]



சீனாவில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஜப்பான் ரயில் 243 கிலோ மீட்டர் வேகத்திலும், பிரான்ஸ் ரயில் 277 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியையொட்டி சீனாவில் அதிவேக ரயில்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிருந்து தெற்கு பகுதியில் உள்ள குவாங்சு நகர் வரை இந்த அதிவேக ரயில் சென்று வருகிறது. ஆயிரத்து 68 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன.
வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் தெற்கு பகுதியில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 42 தடங்களில் இந்த அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, இந்த அதிவேக ரயில், 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறமுடியும் : அமெரிக்க விஞ்ஞானிகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2010, 09:09.47 மு.ப GMT  (LANKASRI.COM ]


செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இதற்கான ஆய்வில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற ஆய்வுகளை ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விஞ்ஞானிகளும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறி அங்கு வாழ முடியும். அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடைபெற வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஹூஸ்டனில் உள்ள நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் விண்வெளி உயிரியல் துறையின் தலைமை விஞ்ஞானி டேவிட் மெக்கேயின் தலைமையிலான குழுவினர் இதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் சக்தி வாய்ந்த புதிய மைக்ராஸ்கோப்புகள் மற்றும் உபகரணங்கள் மூலம் எரிநட்சத்திர கற்களை பரிசோதனை செய்தனர்.

மேலும் அங்குள்ள பாறைகளையும் சோதித்து பார்த்தனர். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் வாயுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எரிநட்சத்திர கற்களை சோதித்து பார்த்ததில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அங்கு ஐஸ்கட்டிகளால் ஆன குளிர்ந்த பாலைவனம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் விழுவதற்கு முன்பு 3 எரிநட்சத்திர கற்களும் 10 லட்சம் ஆண்டுகள் சூரியனை சுற்றியபடியே இருந்துள்ளது. இதற்கிடையே செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் நுண்ணுயிர்கள் இருந்தது. எனவே, அங்கு உயிர்கள் வாழ முடியும் என்று கருதப்படுகிறது.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியும் என்று நாசாவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, January 5, 2010

மேப் மற்றும் ப்ரொஷக்டர் இணைந்த கருவி : வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு முக்கியமானது

[ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2009, 05:25.35 மு.ப GMT ]


நண்பர் அல்லது உறவினர் வெளிநாட்டில் இருந்தால் அவர்களை பார்க்க செல்லும் போது யாராவது விமான நிலையத்திற்க்கு வந்து நம்மை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இனி அது தேவையில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் அவர்களின் வீட்டை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

எப்படி என்று பார்ப்போம் மேப் மற்றும் ப்ரொஷக்டர் இணைந்த கருவி ஒன்று புதிதாக வரவிருக்கிறது.

பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் பென் டிரைவ் போன்று இருக்கும். இதில் நாம் எந்த நாட்டிற்கு எந்த இடத்திற்கு போக வேண்டும் என்பதை இதில் இருக்கும் மேப்பில் சேமித்து வைத்து நாம் எந்த இடத்திற்கும் செல்லலாம் அதுவே வழிகாட்டும் ப்ரொஷக்டர் மேப் -ஐ பெரிதுபடுத்திக்காட்டும். போகும் வழியை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளலாம் எற்கனவே நாம் குறித்து வைத்த இடத்திற்கு செல்ல வேண்டிய பாதையை அம்புக் குறியிட்டு காட்டும். இதன் பின்னனியை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் GPS என்று சொல்லக்கூடிய குளோபல் பொஸிசனிங் சிஸ்டம் (Global Positioning System) மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து செயல்படுகிறது.

ப்ரொஷக்டர் மூலம் செல்ல வேண்டிய இடத்தின் மேப்-ஐ தரையில், சுவற்றில் அல்லது நம் கையில் எங்கு வேண்டுமானாலும் ப்ரொஷக்ட் செய்து பார்க்கலாம். அது மட்டுமின்றி மேப் -ஐ பெரிதாகவோ சிறியதாகவோ எப்படி வேண்டுமோ அப்படி பார்க்கலாம்.