விருப்பங்கள்

Thursday, December 10, 2009

வேதாரண்யம் அருகே பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்தது: 9 குழந்தைகள்- ஆசிரியை பலி; 11 பேர் உயிருடன் மீட்பு

வேதாரண்யம், டிச. 3-






நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாபட்டினத்தில் தேவி நர்சரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

தினமும் பள்ளிக்கூட வேன் கிராமங்களுக்கு சென்று மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு கொண்டு விடுவது வழக்கம்.

இன்று காலை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25 மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் வந்து கொண்டு இருந்தது. கத்திரிபுலம் என்ற ஊர் கோவில் குளம் அருகே வேன் திடீர் என நிலை தடுமாறி ஓடியது.

உடனே மாணவ- மாணவிகள் கூச்சல் போட்டனர். வேனை டிரைவர் பிரேக்போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டில் இருந்து விலகி குளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தால் வேன் முழுவதும் மூழ்கியது. வேனுக்குள் சிக்கிய குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்ததாலும், மூச்சு திணறலாலும், உயிருக்கு போராடினர். கிராம மக்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை மீட்டனர்.

ஆனால் அதற்குள் 9 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். இதில் 5 பேர் மாணவிகள், 4 பேர் மாணவர்கள். பள்ளி ஆசிரியை ஒருவரும் குளத்தில் பிணமாக மிதந்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 11 குழந்தைகளை உயிருடன் மீட்டனர்.

வேனில் 25 மாணவ- மாணவிகளும், 2 ஆசிரியர்களும் இருந்தனர். 5 குழந்தைகளையும் ஒரு ஆசிரியையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.

வேன் குளத்தில் மூழ்கிய போது வேன் டிரைவர் கதவை திறந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரே பள்ளியை சேர்ந்த 9 மாணவ-மாணவிகளும், ஆசிரியையும் பலியாகி உள்ளதால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் முனிய நாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment