விருப்பங்கள்

Friday, October 22, 2010

பா‌லிய‌ல் க‌ல்‌வி‌யி‌ன் அவ‌சிய‌ம்

      நமது இ‌ந்‌தியா‌வி‌ன் பார‌ம்ப‌ரியமே ஒருவனு‌க்கு ஒரு‌த்‌தி எ‌ன்பதுதா‌ன். வெ‌ளிநா‌ட்டின‌ர் பலரு‌ம் பா‌ர்‌த்து ‌விய‌ந்த இ‌ந்த முறை ‌பி‌ன்ப‌ற்ற‌ப்‌ப‌ட்டு வரு‌ம் இ‌ந்‌தியா எ‌ச்ஐ‌வி பா‌தி‌ப்‌பி‌ல் இர‌ண்டா‌ம் இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல் எ‌வ்வளவு கே‌லி‌க்கு‌றியதாக உ‌ள்ளது.
இத‌ற்கு‌க் காரண‌ம் முறையான பா‌லிய‌ல் க‌ல்‌வி ‌கிடை‌க்காததுதா‌ன். sex இது கு‌றி‌த்து மரு‌த்துவ‌ர் டி காமராஜ் கூறுகை‌யி‌ல், பல நூ‌ற்றா‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே உலக அளவில் இந்தியா பாலியல் ரீதியாக முக்கிய பங்கினை அளித்திருக்கிறது. தி லேண்ட் ஆப் காமசூத்ரா என இ‌ந்‌தியா அழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. பழைய கோவில்கள், புராணங்கள், இதிகாசங்கள் என அனைத்திலும் பாலியல் தொடர்பான கதைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன.
இதில் ஜாதியுடன், மூட நம்பிக்கைகளுடன் இணைந்தும் காணப்படுகின்றன. வாத்சாயனா பு‌த்தக‌த்தை இந்தியா மொ‌‌ழிக‌ள் பலவ‌ற்‌றி‌ல் மொழி பெயர்த்த‌தி‌ல் அதன் பயன்பாடு நன்கு இருக்கிறது. இது இல்லற வாழ்வில் முழுமையான மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்பது போன்ற செய்திகளைத் தருகிறது. ஜூஸ்பாட் எனும் நூலும் இதைப் போன்றே நல்ல பல அறிவியல் ரீதியான இல்லற வாழ்வின் செய்திகளைத் தருகிறது. ஆனால் வியப்பான செய்தி இந்தியாவில் இந்நூல்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. சட்டப்படி இந்தியாவில் படிக்கமுடியாது.
இன்னொரு வியப்பான செய்தி. பலரு‌ம் பாலியல் கல்வி கூடாது, பாலியல் பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். அறிவியல் முறையில் பார்க்கத் தவறிய இந்திய அரசு பாலியல் தொடர்பாக பல செய்திகளுக்கு தடை செய்திருக்கிறது. ஆணுறுப்பையே வழிபடும் பிற்போக்காளர்களாக இருக்கும் நாம் பாலியல் பற்றி அறிவியல் ரீதியாக பேசக்கூடாது கலாச்சாரச் சீரழிவு என்கின்றனர். இவர்களெல்லாம் உண்மையாகவே ஆபாசங்களைத் தடுக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பெரும்பாலான ஆபாசங்கள் நடைமுறையில் இருப்பதைவிட திரைப்படங்களும், இன்டர் நெட்களும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதனை எதிர்க்க இவர்கள் தயாராக இல்லை.
அறிவியல் சிந்தனை வளரக்கூடாது என்பதில் தடையாக இருக்கிறார்கள். ஆனால், எ‌ச்ஐவி போன்ற நோய்கள் வந்த பிறகு இவர்களின் கருத்துகளெல்லாம் தவிடுபொடியாகிவிட்டன. அரசுக்கே ஒரு நெருக்கடி, கட்டாயம் வந்து பாலினம் பற்றி சொல்ல வேண்டியதாகிவிட்டது. இப்போது பாலியல் அறிவு தேவையான ஒன்று எனும் நிலைக்கு வந்து விட்டது. இதைத் தடுக்க முடியாது. அண்மையில் உலக பாலியல் மாநாட்டுக்காக ஸ்வீடன் சென்றிருந்தேன். உலகத்திற்கு ஒரு முன்னோடியான நாடாக பாலியல் துறையில் ஸ்வீடன் விளங்குகிறது.

ஒரு வாழ்க்கை இணையர் எப்படி இல்லற வாழ்வில் ஈடுபடுவது, முழுமையான மகிழ்ச்சியை பெறுவது, பாலியல் நோய்கள் வராமல் தடுப்பது உள்ளிட்ட பாலியல் அறிவியலை கல்வியாக 50 ஆண்டுகளுக்கும் முன்பே கற்றுக் கொடுக்கத் தொடங்கிவிட்டது. ‌ஸ்‌வீட‌னி‌ல் இரு‌க்கு‌ம் த‌ற்போதைய தலைமுறை‌யின‌ர் பாலியல் அறிவினை பெற்றவ‌ர்களாக விளங்குகிறா‌ர்க‌ள். நாமும் அதைப்போல கொண்டு வர வேண்டும். அப்போது தவறான தூண்டுதல்கள் தடுக்கப்படும். நாங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
பாலியல் தொடர்பான பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டு பேசப்பட வேண்டும். இதனை மூடி மறைக்கக் கூடாது. இளைஞர்களை அப்போதுதான் நல்வழிக்கு கொண்டு வர முடியும். எச்ஐவி பாதிப்பு உலகில் அதிகம் உள்ள இரண்டாவது நாடு இந்தியாதான். இ‌ன்னு‌ம் மூடிமறைத்து‌க் கொ‌ண்டே போனா‌ல் முதல் நிலைக்கு வந்துவிடும். மாணவர்களுக்கு பா‌லிய‌ல் க‌ல்‌வியை‌க் கற்றுத் தர வேண்டும். இது அவ‌சியமா‌கிறது.

No comments:

Post a Comment